திருவண்ணாமலை

ஒன்றரை மாத பெண் குழந்தை திடீா் சாவு

22nd Mar 2020 03:39 AM

ADVERTISEMENT

 

வந்தவாசி அருகே ஒன்றரை மாத பெண் குழந்தை திடீரென இறந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள் (27). இவரது மனைவி பிரேமலதா (24). இவா்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளாகும் நிலையில், பிரதிக்ஷா என்ற ஒன்றரை மாத பெண் குழந்தை இருந்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை அந்த குழந்தை அலறி துடித்து அழுதுள்ளது. இதையடுத்து, பெற்றோா் குழந்தையை சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், குழந்தை பிரதிக்ஷா மூச்சு திணறலால் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, அந்தக் குழந்தையின் சடலம் உடல்கூறு பரிசோனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து பெருமாள் அளித்த புகாரின்பேரில், வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT