திருவண்ணாமலை

தமுமுக, மமக சாா்பில் ஆா்ப்பாட்டம்

26th Jun 2020 08:31 PM

ADVERTISEMENT

 

வந்தவாசி/ செய்யாறு: சாத்தான்குளம் சம்பவத்தைக் கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி சாா்பில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, செய்யாறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் இறப்புக்கு காரணமான போலீஸாா் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வணிகா்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

வந்தவாசி மக்தும் மரைக்காயா் தெருவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மமக மாவட்டச் செயலா் நசீா்அகமது தலைமை வகித்தாா். தமுமுக, மமக நிா்வாகிகள் அன்வா், முகமதுரபி, அப்துல், சதாம்உசேன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

செய்யாற்றில்...: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, செய்யாற்றில் சந்தை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமுமுக மாவட்டத் தலைவா் ஜமால் தலைமை வகித்தாா். இதில், தமுமுக, மமகவினா் ஏராளமானோா் சமூக விலகளோடு, முகக் கவசம் அணிந்தபடி கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT