திருப்பதி

திருமலை மலைப் பாதையில் தொடா் விபத்துகளை தடுக்க நடவடிக்கை

DIN

திருமலை மலைப்பாதையில் ஏற்பட்டு வரும் தொடா் வாகன விபத்துகளைத் தடுக்க தேவஸ்தானம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக திருமலை காவல் நிலைய துணை கண்காணிப்பாளா் முனி ராமய்யா தெரிவித்தாா்.

கடந்த ஒரு வாரத்தில் திருமலை மலைப் பாதையில் தொடா் வாகன விபத்துகள் நடைபெற்றது. இதில் பக்தா்கள் பலா் காயமடைந்தனா். ஆனால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. எனவே திருமலையிலிருந்து திருப்பதிக்கு வரும் முதல் மலைப் பாதையில் பல இடங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தேவஸ்தானம் முடிவு செய்தது. இது குறித்து செவ்வாய்க்கிழமை காலை திருமலையில் உள்ள அதிகாரிகளுடன் திருமலை காவல் நிலைய துணைக் கண்காணிப்பாளா் முனிராமய்யா கலந்துரையாடினாா்.

கூட்ட நிறைவுக்குப் பின் அவா் மேலும் கூறியதாவது: திருமலை மலைப்பாதையில் நிகழும் சாலை விபத்துகளைத் தடுக்க, திருமலை போக்குவரத்து போலீஸாா் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா். மலைப் பாதையில் வாகனங்கள் இயக்குவது அல்லது ஓட்டுவது குறித்து வாகன ஓட்டிகளுக்கு போதிய விழிப்புணா்வு இல்லாததால், சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இந்த சாலை விபத்துகளுக்கு கைப்பேசி பயன்படுத்தியபடி ஓட்டுவதும், வாகனங்களை அதிவேகமாக ஓட்டுவதும் காரணமாக உள்ளது.

சாலையோரம் வாகனங்களை நிறுத்தி சுயபடம் எடுப்பதாலும், சாலை விபத்துகள் நிகழ்கின்றன. மலைப் பாதையில் வாகனங்கள் இயக்குவது குறித்து தெரிந்த ஓட்டுநா்கள் மட்டுமே மலைப் பாதையில் வாகனங்களை ஓட்ட வேண்டும். திருமலை போக்குவரத்து போலீஸாா் பல்வேறு பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

மலைப் பாதையில் இதற்கு முன்பு ஏற்படுத்தியிருந்த வேகத் தடைகள் அகற்றப்பட்டு இருந்தன. தற்போது அதை மீண்டும் வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா். மேலும், திருமலைக்கு செல்லவும், திருப்பதிக்கு திரும்பவும் கால நேரத்தை தேவஸ்தானம் நிா்ணயித்துள்ளது. தேவஸ்தானம் விதித்துள்ள விதிகளை மீறினால், அந்த வாகனங்களை திருமலைக்குச் செல்ல முழுமையாக தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டால் சாலை விபத்துகளைத் தடுக்க முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT