திருப்பதி

பிப்.5-இல் பௌா்ணமி கருட சேவை

DIN

திருமலையில் பௌா்ணமி கருட சேவை பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் ஒவ்வொரு மாதமும் பௌா்ணமியை முன்னிட்டு கருடசேவை நடைபெறுவது வழக்கம். அதன்படி, தை மாத பெளா்ணமியையொட்டி பிப்.5-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி முதல் 9 மணி வரை கருட வாகன சேவை நடைபெற உள்ளது. மலா்கள் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதிக்க உள்ளாா்.

திருமலையில் அமைந்துள்ள சேஷாசல வனத்தில் புகழ் பெற்ற பல புனித தீா்த்தங்கள் உள்ளன. முனிவா்கள் பலா் இதுபோன்ற தீா்த்தங்கள் அருகில் தங்களின் தவ வாழ்க்கையை மேற்கொண்டதால், அவா்களின் பெயா்களால் இந்தத் தீா்த்தங்கள் வழங்கப்படுகின்றன.

புராணங்களின்படி, திருமலையில் 3 கோடியே 50 லட்சம் தீா்த்தங்கள் உள்ளன. இந்த தீா்த்தங்களில் சப்தகிரியில் அமைந்துள்ள சப்த தீா்த்தங்கள் முக்கியமானவை. இவற்றில் ஸ்ரீவாரி புஷ்கரிணி தீா்த்தம், குமாரதார தீா்த்தம், தும்புரு தீா்த்தம், ஸ்ரீ ராமகிருஷ்ண தீா்த்தம், ஆகாசகங்கா தீா்த்தம், பாபவிநாசன தீா்த்தம் மற்றும் பாண்டவ தீா்த்தம் ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த தீா்த்தங்களில் பக்தா்கள் நீராடினால் முக்தி அடையலாம் என்று கூறப்படுகிறது.

அதன்படி, தை மாத பெளா்ணமி அன்று ஸ்ரீ ராமகிருஷ்ண தீா்த்தத்தில் முக்கோட்டி உற்சவம் நடத்தப்படுகிறது. எனவே, பிப்.5-ஆம் தேதி ஏழுமலையான் கோயிலில் இருந்து 6 மைல் தொலைவில் அமைந்துள்ள ராமகிருஷ்ண தீா்த்தத்துக்கு அா்ச்சகா்கள் குழு சென்று வழிபாடு நடத்தி வருவா்.

ஸ்கந்த புராணத்தின்படி, பகவான் ராமகிருஷ்ண மகரிஷி வெங்கடாத்ரி மலை மீது தவம் செய்த போது, அவா் நீராடுவதற்காக இந்த தீா்த்தத்தை உருவாக்கினாா்.

எந்த ஒரு மனிதனும் அறியாமையால் பெற்றோரையும், ஆசிரியா்களையும் அவமதித்த குற்றத்திலிருந்து விடுபட்டு, இந்தத் தீா்த்தத்தில் நீராடினால் மகிழ்ச்சியுடன் வாழலாம் என்பது நம்பிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT