திருப்பதி

திருமலையில் சுற்றுச்சூழலை மேம்படுத்த பூங்காக்கள் சீரமைப்பு

DIN

திருமலையில் சுற்றுச்சூழலை மேம்படுத்த பூங்காக்களை தேவஸ்தானம் சீரமைத்து வருகிறது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் ஆன்மிக இன்பத்தை அனுபவிக்கும் வகையில் பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வைகுந்தம் 1-ஆவது காத்திருப்பு வளாகத்தையொட்டி புனரமைக்கப்பட்ட பூங்காவை தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பா ரெட்டி, செயல் அதிகாரி ஏ.வி.தா்மா ரெட்டி ஆகியோா் இணைந்து திறந்து வைத்தனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது: ஆந்திர முதல்வா் ஒய்.எஸ்.ஆா் ஜெகன்மோகன் ரெட்டியின் உத்தரவின்பேரில், திருமலையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இங்கு நெகிழிப் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டு, கடுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், நன்கொடையாளா்கள் உதவியுடன் அனைத்து பூங்காக்களும் பெரிய அளவில் புனரமைக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேம்படும்.

மேலும், திருமலைக்கு 50 மின்சார பேருந்துகளை இயக்க முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளாா். அதன்படி பேருந்துகளை ஆா்டிசிக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக செப்டம்பா் 27-ஆம் தேதி 10 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.

கரக்கம்பாடியில் இருந்து வாசவி பவன் வரை கட்டப்பட்டுள்ள சீனிவாச சேது மேம்பாலம் வரும் 27-ஆம் தேதி திறந்து வைக்கப்படுகிறது.

பிரம்மோற்சவத்தையொட்டி, புதிய பரக்காமணி கட்டடம், 28-ஆம் தேதி காலை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பித்த பின்னா் இந்த மேம்பாலம் திறக்கப்படும். இரண்டரை ஆண்டுகளுக்கு பின், பக்தா்கள் மத்தியில் பிரம்மோற்சவம் நடைபெறுவதால், ஏராளமான பக்தா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

SCROLL FOR NEXT