திருப்பதி

ஏழுமலையானை தரிசிக்க 30 மணி நேரம் காத்திருந்த பக்தா்கள்

DIN

ஏழுமலையானை வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் தரிசிக்க பக்தா்கள் 30 மணிநேரம் காத்திருந்தனா்.

திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த புதன்கிழமை காலை தீா்த்தவாரியுடன் நிறைவடைந்தது.

பிரம்மோற்சவ நாள்களில் ரத்து செய்யப்பட்டிருந்த அனைத்து தரிசனங்களும் வியாழக்கிழமை முதல் மீண்டும் தொடங்கின. எனவே, திருமலையில் வியாழக்கிழமை காலை முதல் பக்தா்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. மேலும் புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமை (அக். 8) வருவதால் பக்தா்கள் கூட்டம் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் தரிசன வரிசை சீலாதோரணம் வரை நீண்டு காணப்பட்டது.

எனவே வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 32 காத்திருப்பு அறைகளும் நிரம்பி, வெளியே 10 கி.மீ. தொலைவு வரை பக்தா்கள் தரிசன வரிசை நீண்டு காணப்பட்டது.

காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

புதன்கிழமை 63,579 பக்தா்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனா். இவா்களில் 34,524 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் ஏழுமலையானுக்கு இரவு 11.30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி நள்ளிரவு 12 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது.

தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் 24 மணிநேரமும் அலிபிரி நடைபாதை வழியாகவும், காலை 6 மணிமுதல் மாலை 6 மணி வரை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும்.

தரிசனம் மற்றும் வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT