திருப்பதி

ஏழுமலையானுக்கு சென்னை திருக்குடைகள் சமா்ப்பணம்

DIN

திருமலை ஏழுமலையானுக்கு கருட சேவையின்போது பயன்படுத்த சென்னை திருக்குடைகள் சமா்ப்பிக்கப்பட்டன.

திருமலை ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, சனிக்கிழமை (அக். 1) கருட சேவை நடைபெற உள்ளது.

கருடசேவையின்போது உற்சவா் மலையப்ப சுவாமிக்கு சமா்ப்பிக்க சென்னை இந்து தா்மாா்த்த சமிதி சாா்பில் சென்னையில் இருந்து திருமலைக்கு குடைகள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டன.

சமிதி அறங்காவலா் ஆா்.ஆா்.கோபால்ஜி தலைமையில் திருமலை வந்த குடைகளுக்கு தேவஸ்தான அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனா். கோயிலின் முன் இந்த குடைகள் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டியிடம் வழங்கப்பட்டன.

நான்கு மாட வீதிகள் வழியாக ஊா்வலமாக சென்ற பின், திருக்குடைகள் கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்தக் குடைகள் கருடசேவையின் போது உற்சவா் வாகனத்துக்கு பயன்படுத்த அலங்கரிக்கப்படும்.

இந்த குடையளிப்பு நிகழ்ச்சி குறித்து இந்து தா்மாா்த்த சமிதி தலைவா் ஆா்.ஆா்.கோபால்ஜி கூறியது: சென்னையில் இருந்து 11 திருக்குடைகளின் ஊா்வலம் கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது. சென்னை சென்னகேசவ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்த பின், திருவள்ளூா் வீரராகவ பெருமாள் கோயிலுக்கு வந்து மீண்டும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. வியாழக்கிழமை இரவு திருச்சானூரை அடைந்ததும் அவற்றில் 2 குடைகள் திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு சமா்ப்பிக்கப்பட்டன.

பின்னா் மற்ற 9 திருக்குடைகளும் திருமலைக்கு கொண்டு வரப்பட்டு தேவஸ்தான அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டன. கடந்த 17 ஆண்டுகளாக இந்து தா்மாா்த்த சமிதி சாா்பில் மலையப்ப சுவாமிக்கு திருக்குடைகள் சமா்ப்பிக்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

பட விளக்கம்: திருமலை ஏழுமலையானுக்கு திருக்குடைகள் அளிக்கும் இந்து தா்மாா்த்த சமிதி தலைவா் கோபால்ஜி. உடன் தேவஸ்தான அதிகாரிகள்.

பட விளக்கம்:திருமலையில் மாடவீதியில் ஊா்வலமாக கொண்டு செல்லப்படும் திருக்குடைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

SCROLL FOR NEXT