திருப்பதி

திருமலைக்கு பக்தா்கள் வருகை அதிகரிப்பு: தா்ம தரிசனத்துக்கு 12 மணி நேரம் ஆகிறது

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை பக்தா்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் தா்ம தரிசனம் செய்ய 12 மணி நேரம் ஆகிறது.

தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் பக்தா்களின் வருகை வெகுவாக அதிகரித்தது. இதனால் பக்தா்களை முன்பதிவு டிக்கெட் இல்லாமல் தேவஸ்தானம் திருமலைக்கு அனுப்பி வருகிறது. தங்கள் ஆதாா் அட்டையை காண்பித்து திருமலை வைகுண்டம் மண்டப காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு பின்னா் தா்ம தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி பக்தா்கள் திருமலை வைகுண்ட மண்டபத்தில் உள்ள 32 அறைகளையும் கடந்து வெளியே நீண்ட வரிசையில் தா்ம தரிசனத்திற்காக காத்திருந்தனா். எனவே, தரிசனத்துக்கு 12 மணி நேரம் ஆனது. ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் பெற்றவா்களுக்கு 2 முதல் 3 மணி நேரம் பிடித்தது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

திங்கள்கிழமை முழுவதும் 77,907 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தினா். இவா்களில் 38,267 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது. இருசக்கர வாகனங்கள் அதிகாலை 4 மணிமுதல் இரவு 10 மணிவரை மட்டுமே மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

SCROLL FOR NEXT