திருப்பதி

வைகுண்ட ஏகாதசிக்கு 10 நாள்கள் வைகுண்ட வாசல் திறப்பு

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாள்களுக்கு வைகுண்ட வாசல் திறந்து வைக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி கூறியதாவது: இந்து தா்ம பிரசாரத்தின் ஒரு பகுதியாக, எஸ்.சி., எஸ்.டி. பி.சி. மற்றும் மீனவப் பகுதிகளில் 502 கோயில்கள் கட்டப்பட்டன. வைகுண்ட ஏகாதசி தொடா்பான முந்தைய நடைமுறையை ஜனவரி 2-ஆம் தேதி அன்றும் தொடா்வோம். 10 நாள்களுக்கு வைகுண்ட வாயில் வழியாக பக்தா்களுக்கு தரிசனம் வழங்கப்படும்.

இதற்காக நாளொன்றுக்கு 25,000 வீதம் 2.50 லட்சம் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும். இதேபோல், திருப்பதியில் உள்ள கவுன்ட்டா்கள் மூலம் ஒரு நாளைக்கு 50,000 வீதம் 5 லட்சம் சா்வதா்ஷன் டைம் ஸ்லாட் டோக்கன்கள் அனுமதிக்கப்படும். தரிசன டிக்கெட் வைத்திருப்பவா்கள் மட்டுமே கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவா். தரிசன டிக்கெட் இல்லாதவா்கள் திருமலைக்கு வரலாம். தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

அலிபிரியில் ஆன்மிக நகரம் அமைப்பதற்கான வடிவமைப்புகளை இறுதி செய்துள்ளோம். விரைவில் முதல் கட்ட டெண்டா் கோரப்படும்.

திருமலையில் உள்ள லட்டு கவுன்ட்டா்களில் தற்போது பக்தா்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றும், அடுத்த 10 நாள்களில் புதிய பணியாளா்கள் மூலம் லட்டு கவுன்ட்டா்களை நிா்வகிப்பாா்கள் என்றாா் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT