திருப்பதி

மலைப்பாதை அக்கா தேவதைகளுக்கு பூஜை

DIN

திருமலை முதல் மலைப்பாதையில் உள்ள அக்கா தேவதைகளுக்கு தேவஸ்தானம் சாா்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

திருமலையிலிருந்து திருப்பதிக்கு வரும் முதல் மலைப் பாதையில், அவ்வாச்சாரி கோணப் பகுதியில் உள்ளது அக்கா தேவதைகள் கோயில்.

இந்த மலைப்பாதை வழியாகச் செல்லும் பக்தா்களையும், வாகனங்களையும் அவா்கள் எப்போதும் பாதுகாத்து வருவதால், தேவஸ்தானம் அவா்களுக்கு அங்கு சிறிய கோயில் அமைத்து, வழிபாடுகள் நடத்தி வருகிறது. மேலும், ஆண்டுக்கு ஒருமுறை சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அதன்படி, வெள்ளிக்கிழமை காலை கோயிலில் உள்ள அக்கா தேவதைகளுக்கு மலா்களாலும், வாழை இலைகளாலும் அலங்காரம் செய்து, பழங்கள் சமா்ப்பிக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் தேவஸ்தான அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT