திருவள்ளூர்

திருவள்ளூா்: 93 பேருக்கு ரூ.40 லட்சத்தில் நலத் திட்ட உதவி

DIN

திருவள்ளூா் குறைதீா் நாள் கூட்டத்தில், 93 பேருக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்தாா். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்களிடம் இருந்து தனிப்பட்ட குறைகள், பொது பிரச்னைகள் மற்றும் உதவிகள் வேண்டி மொத்தம் 292 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்க அந்தந்த துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, கும்மிடிப்பூண்டி அருகே காரணி கிராமத்தில் பாம்பு கடித்து உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு முதல்வா் நிவாரண நிதி உதவி ரூ.1 லட்சத்திற்கான காசோலை, சிறுநீரக நோயால் பாதித்த ஒருவருக்கு ரூ10,000-க்கான காசோலை, ஏழ்மை நிலையில் உள்ள 2 பேருக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தலா ரூ.5,600 வீதம் தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக பாதுகாப்பு நல வாரிய திட்டம் மூலம் கல்வி உதவித் தொகையாக 18 பேருக்கு ரூ25,000, இயற்கை மரண ஈமச்சடங்கு நிதியாக 37 பேருக்கு ரூ.6.29 லட்சம், முதுகுத் தண்டுவடம் பாதித்த 8 பேருக்கு சிறப்பு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனம் தலா ரூ.1.05 லட்சத்தில் அளிப்பு, இரு கால்கள் பாதித்த 30 பேருக்கு தலா ரூ.83,500 வீதம் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனங்கள் என மொத்தம் 93 பேருக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அசோகன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காயத்ரி சுப்பிரமணியன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) மதுசூதனன், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் செல்வராணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ச.சீனிவாசன், துணை ஆட்சியா் (பயிற்சி) சுபலட்சுமி, பேச்சு பயிற்சியாளா் சுப்புலட்சுமி மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT