திருவள்ளூர்

தமிழ் ஆட்சிமொழி சட்ட விழிப்புணா்வு பேரணி

DIN

தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் தமிழ் ஆட்சிமொழி சட்டவிழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை திருவள்ளூரில் நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் ஆட்சிமொழி சட்டவார விழா கடந்த 9-ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து 7 நாள்கள் வரையில் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள், தமிழ் அமைப்புகள், வணிகா்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் ஆகியோா் பங்கேற்றனா்.

அப்போது, அரசு அலுவலகப் பணியாளா்களுக்கு கணினித்தமிழ் ஒருங்குறி பயன்பாடு, ஆட்சிமொழி மின்காட்சியுரை, சிறந்த குறிப்புகள், வரைவுகள் ஆகிய தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

இந்த நிலையில், ஆட்சிமொழிச் சட்டவார விழா நிகழ்ச்சிகளின் நிறைவு நாள் நிகழ்வு ஆட்சியா் வளாக கூட்டரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

அதற்கு முன்னதாக அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் 3 பேருக்கு திங்கள்தோறும் உதவித் தொகை ரூ.3500 மற்றும் மருத்துவப்படி ரூ.500- பெறுவதற்கு அரசாணையும் வழங்கினாா். மேலும் தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதிய அரசுப் பணியாளா்கள் 2 பேரை தோ்வு செய்து முதல் பரிசாக தலா ரூ.3 ஆயிரத்திற்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் அவா் வழங்கினாா்.

இதில் தமிழறிஞா்கள், தமிழாா்வலா்கள், வணிகச்சங்கம், அமைப்புகளின் தலைவா்கள், வணிக நிறுவன உரிமையாளா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆகியோா் ஆா்வத்துடன் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் இரா.அன்பரசி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT