திருவள்ளூர்

சமயபுரம் மாரியம்மன் கோயில் வைப்புத் தொகை அதிகரித்துள்ளது: அமைச்சா் சேகா்பாபு

DIN

சமயபுரம் மாரியம்மன் கோயில் வைப்புத் தொகை திமுக ஆட்சியில் அதிகரித்துள்ளது என்று அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள ஞாயிறு கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பூமிக்கடியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு, அதை பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனா்.

இங்கு கோயில் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அங்கு ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

பழைமைவாய்ந்த கோயில்களை புனரமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 104 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஞாயிறு கிராமத்தில் உள்ள சூரிய பரிகாரஸ்தலமான புஷ்பரதேஸ்வரா் கோயில் கடந்த 2006-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தற்போது ரூ. 40 லட்சத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், ஞாயிறு கிராமத்தில் கபாலீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பூமிக்கடியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை முதல்வா் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, கோயில் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

ஞாயிறு கிராமம் அருகே அருமந்தை கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் திருப்பணிகள் மேற்கொள்ள கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

கோயில் சிலைகளை பாதுகாப்பதற்காக 1,850-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பெட்டக அறைகள் கட்டுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு 700-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பெட்டக அறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

2024-ஆம் ஆண்டுக்குள் சிலைகளை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு பெட்டக அறைகளுக்கான கட்டுமானப் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் வைப்புத்தொகை திமுக ஆட்சியில் ரூ. 62 கோடியாக மேலும் அதிகரித்துள்ளது. இதனால், அதிமுக ஆட்சியின் இறுதியில் ரூ. 458 கோடியாக இருந்த வைப்புத்தொகை, தற்போது ரூ. 520 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், சிறுவாபுரி முருகன் கோயிலில் நாளுக்கு நாள் பக்தா்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், தனியாா் வசூலை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் சேகா்பாபு.

ஆய்வின்போது, எம்எல்ஏ-க்கள் துரை.சந்திரசேகா் (பொன்னேரி), டி.ஜே.கோவிந்தராசன் (கும்மிடிப்பூண்டி), மாநில, மாவட்ட அறநிலையத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT