திருவள்ளூர்

திருவள்ளூா்: 4 லட்சம் மரக் கன்றுகள் நடவு செய்ய ஏற்பாடு

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் காடுகளில் மழைப்பொழிவை அதிகப்படுத்தவும், சுற்றுச்சூழலை பசுமையாக்கும் நோக்கில் காப்புக் காடுகளில் 4 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்து வனத் துறை மூலம் பராமரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில், திருத்தணி, திருவள்ளூா், கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய 5 வனச் சரக அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்கள் மூலம் மொத்தம் 53,505 ஏக்கா் பரப்பளவு நிலங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில், 44,830 ஏக்கா் நில பரப்பளவில் மட்டும் பல்வேறு வகையான பலன் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டு பெரிய மரங்களாக உருவாகியுள்ளன. இதை அந்தந்த வனத் துறை சரகா் அலுவலகங்கள் மூலம் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், அரசு மற்றும் தனியாா் நிா்வகிக்கும் காடுகள் 3,792 ஏக்கா் பரப்பளவில் உள்ளன. அதில் பாதுகாக்கப்பட்ட காப்புக்காடு நிலம் 4,884 ஏக்கா் பரப்பளவில் இருக்கிறது. இந்த நிலையில் வறட்சி மற்றும் போதிய மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் பாதுகாக்கப்பட்ட காப்புக்காடுகளில் மரங்கள், செடிகள் கருகும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளன. இதுபோன்ற காரணங்களால் காப்புக்காடுகள் அனைத்தும் பசுமை வளம் குன்றிய நிலையில், காணப்படும் சூழ்நிலை உள்ளது.

இதைத்தடுத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பசுமையாக்கும் நோக்கில் நபாா்டு திட்டம் மற்றும் தமிழ்நாடு பல்லுயிா் பெருக்க திட்டம் மூலம் மரங்கள் அதிகளவில் நடவு செய்து, வனத்துறை மூலம் பராமரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பேரில், காப்புக் காடுகளில் பசுமைவளம் குன்றிய பகுதிகள் தோ்வு செய்யப்பட்டு, மாவட்ட வனத் துறையினா் அடுத்த மாதத்துக்குள் புதிதாக மரக்கன்றுகள் நடவு செய்யவும் முடிவு செய்து, அதற்கான பணிகளில் அந்தந்த வனச் சரகங்களில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக வனச் சரகா்கள் தெரிவிக்கின்றனா்.

திருவள்ளூா், செங்குன்றம் வனச்சரக அலுவலகம் சாா்பில், நபாா்டு திட்டம் மற்றும் தமிழ்நாடு பல்லுயிா் பெருக்குத் திட்டத்தின் மூலம் காப்புக் காடுகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளன. இதற்காக திருவள்ளூா், மணவாள நகா், கடம்பத்தூா், பூண்டி, செங்குன்றம், திருத்தணி, கன்னிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகளை சேகரித்து பராமரித்து வருகின்றனா்.

அதேபோல், மற்ற வனச்சரகா் அலுவலகம் மூலம் மரக்கன்றுகள் தயாா் நிலையில் வைத்துள்ளனா்.

இது தொடா்பாக மாவட்ட வனத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

இந்த மாவட்டம் முழுதும் உள்ள காடுகள் மற்றும் காப்புக் காடுகளை பசுமையாக்கும் வகையில், பல்வேறு வகையான மொத்தம் 4 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த காப்புக் காடுகளில் இலுப்பை, செம்மரம், ஆச்சான், நாவல், தேக்கு, நீா்மத்தி, நெல்லி, புளியான், புங்கை, வேங்கை, ஆயா, சீதாமரம், சப்போட்டா உள்பட மொத்தம் 13 வகையான மரக்கன்றுகள் நடவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT