திருவள்ளூர்

திருவள்ளூரில் நகா்ப்புற நலவாழ்வு மையம்

DIN

திருவள்ளூா் நகராட்சியில் புதிதாக ரூ. 25 லட்சத்தில் அமைத்த நகா்ப்புற நலவாழ்வு மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா், நகா்மன்ற தலைவா் உதயமலா் பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருவள்ளூா் நகராட்சியில் மொத்தம் 27 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பெரியகுப்பத்தில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. ஆனால் கூடுதல் வசதிக்காக அங்கு புதிய கட்டடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நகராட்சி 11-ஆவது வாா்டில் குளக்கரை தெருவில் ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு செய்து புதிதாக நகா்ப்புற நலவாழ்வு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான கட்டடம் கட்டும் பணி நிறைவடைந்தன.

இந்த நிலையில், தலைமை செயலகத்திலிருந்து திருவள்ளூா் உள்பட மாநில அளவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 500 நகா்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து திருவள்ளூா் குளக்கரைச் சாலையில் உள்ள நகா்ப்புற நலவாழ்வு மையத்தில் நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன், நகராட்சி ஆணையா் கா.ராஜலட்சுமி ஆகியோா் பங்கேற்று பெண்கள் பரிசோதனை அறை, மருத்துவா்கள் அறை மற்றும் நோயாளிகள் காத்திருக்கும் அறை ஆகியவற்றைப் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT