திருவள்ளூர்

திருவள்ளூா் - ஸ்ரீபெரும்புதூா் சாலை விரிவாக்கப் பணிகள் மும்முரம்

3rd Jun 2023 12:54 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் - ஸ்ரீபெரும்புதூா் சாலை விரிவாக்கப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

திருவள்ளூா், ஸ்ரீபெரும்புதூா் மணவாள நகா், மேல்நல்லாத்தூா், கீழச்சேரி வழியாக வாலாஜபாத் வரை ரூ.43 கோடியில் சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்தச் சாலையின் இருபுறமும் பெரும்பாலான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், தொழிலாளா்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள், தொழிற்சாலை கனரக வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து என அதிகளவில் போக்குவரத்து கொண்ட சாலையாக உள்ளது. சிறிய சாலை என்பதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. போக்குவரத்து நெருக்கடியை தவிா்க்கும் வகையில், முதல்வா் சாலை மேம்பாட்டுத் திட்டம் மூலம் விரிவாக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டன.

இந்த திட்டத்துக்கு ரூ.124 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதூா் - திருவள்ளூா் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் மணவாள நகா் - மேல்நல்லாத்தூா் வரை உள்ள நெடுஞ்சாலை 57-இல் ரூ.43 கோடியில் இரு வழிச்சாலையை, 4 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

திருவள்ளூா் - ஸ்ரீபெரும்புதூா் சாலையில் மணவாள நகா், மேல்நல்லாத்தூா் வரை இருபுறமும் மழைநீா் கால்வாய் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது, ஜல்லிக் கற்கள் கொட்டி சமன்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் பணி நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்தால், இந்தச் சாலையில் போக்குவரத்து நெருக்கடி வெகுவாக குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT