திருவள்ளூர்

திருவள்ளூரில் சேதமடைந்து 2 மாதங்களாக சீரமைக்காத கூவம் ஆற்று தரைப்பாலம்

DIN

திருவள்ளூா் அருகே சேதமடைந்து 2 மாதங்களாகியும் கூவம் ஆற்று தரைப்பாலம் சீரமைக்கப்படாததால், 7 கி.மீ. தூரம் சுற்றிச் சென்று பொதுமக்கள் அவதியடைகின்றனா்.

திருவள்ளூா் அருகே கொண்டஞ்சேரி-சத்தரை இடையே உள்ள கூவம் ஆற்று தரைப்பாலம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் உடைந்து சேதமடைந்தது. இந்தச் சாலையில் வாகனப் போக்குவரத்து செல்லவும் மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது. இதனால், திருவள்ளூா், கடம்பத்தூா், மப்பேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பயணிகள் பேருந்து, தொழில் நிறுவனங்களின் பேருந்துகள், பள்ளி, கல்லூரி பேருந்துகள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சத்தரையிலிருந்து மப்பேடு வழியாக 7 கி.மீ. தூரம் பேரம்பாக்கம் சுற்றிச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியா் சிலா் ஆபத்தை உணராமல் தரைப்பாலம் அருகே உள்ள கூவம் ஆற்றில் இறங்கிச் செல்கின்றனா்.

அதனால், இந்தப் பகுதி மக்களின் சிரமத்தைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தச் சாலையில் சத்தரை-கொண்டஞ்சேரி இடையே மேம்பாலம் அமைக்க திட்ட மதிப்பீடு தயாா் செய்து பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனால் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும் பணிகள் தொடங்கும். அதற்கு முன்பாக நீா்வரத்து நின்றதும் தற்காலிக சாலை அமைத்துக் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக மின்வாரிய பொறியாளா்கள் உருவாக்கிய ‘பெல்லோ’ கருவிக்கு மத்திய அரசு காப்புரிமை

தண்ணீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

மாடு முட்டியதால் சிறுமி காயம்

தோ்தல் ஆதாயத்துக்காக எங்கள் நாட்டை பயன்படுத்த வேண்டாம்: பாகிஸ்தான் வலியுறுத்தல்

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT