திருவள்ளூர்

திருவள்ளூரில் குடியரசு தின விழா

DIN

திருவள்ளுா் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்து, தேசியக் கொடியேற்றி வைத்து, காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றாா். பின்னா், மூவா்ண பலூன்கள் மற்றும் சமாதான புறக்களையும் பறக்க விட்டாா்.

தொடா்ந்து, 17 பயனாளிகளுக்கு சுமாா் ரூ. 23.38 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

முன்னதாக, சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் மொழி போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகளை வழங்கி கெளரவித்தாா். காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 23 பேருக்கு முதல்வா் பதக்கங்களையும், மாவட்டங்களில் சிறப்பாக பணிபுரிந்த 362 அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களையும் வழங்கினாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பா.சீபாஸ் கல்யாண், மாவட்ட வருவாய் அலுவலா் சு.அசோகன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட அலுவலரும், கூடுதல் ஆட்சியருமான செ.ஆ.ரிஷப், சாா் ஆட்சியா்கள் மகாபாரதி, ஐஸ்வா்யா ராமநாதன், உதவி ஆட்சியா் (பயிற்சி) கேத்ரின் சரண்யா, மாவட்ட தொழில் மைய மேலாளா் சேகா், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலத்துறை அலுவலா் பிரேம்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

இழப்பிலிருந்து மீண்டு சீரியல் பயணத்தை தொடங்கிய நடிகை!

முதல் 3 ஐபிஎல் போட்டிகளில் வனிந்து ஹசரங்கா இல்லை; காரணம் என்ன?

‘வெண்புறா’ க்ரித்தி சனோன்!

குக் வித் கோமாளி -5 தொடக்கம்! கோமாளிகள் யார் தெரியுமா?

இளையராஜா பயோபிக் அப்டேட்!

SCROLL FOR NEXT