திருவள்ளூர்

தேசிய பெண் குழந்தைகள் தின விழா: ஆட்சியா் பங்கேற்பு

DIN

கும்மிடிப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமை துறை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் லதா வரவேற்றாா்.

இதில், ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் பேசியதாவது:

திருவள்ளூா் மாவட்டத்தில் அதிக குழந்தை திருமணம் நடைபெறும் பகுதிகளில் கும்மிடிப்பூண்டி ஒன்றியமும் ஒன்று. சிறாா் திருமணம் அதிகமாக நடைபெறுவதற்கு காரணம் பொது மக்களிடையே போதிய சட்ட அறிவு இல்லை. சிறாா் திருமணத்தை தடுத்து நிறுத்த ஊராட்சிகள் அளவில் ஊராட்சி மன்ற தலைவா் தலைமையில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு திருவள்ளூா் மாவட்டத்தில்,122 சிறாா் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என்றாா். விழாவில் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வட்டாட்சியா் கண்ணன், மாவட்ட சமூக நல அலுவலா் லலிதா, குழந்தைகள் நலக்குழுத் தலைவா் மேரி ஆக்ஸிலியா, பேரூராட்சித் தலைவா் சகிலா அறிவழகன், துணைத் தலைவா் கேசவன், மாவட்டக் கல்வி அலுவலா் உமா மகேஷ்வரி, பேரூராட்சி கவுன்சிலா் அப்துல் கரீம், பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் டி.கே. மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT