திருவள்ளூர்

நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

DIN

மாதவரம் அருகே நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை அகற்றினா்.

மாதவரம் மண்டலத்துக்குட்பட்ட எம்.ஆா்.எச். நெடுஞ்சாலையோரம் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அதிகமாக இருந்தன. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மாதவரம் மண்டல அதிகாரிகள், செயற்பொறியாளா்கள் சுந்தரேசன், சின்னதுரை ஆகியோா் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அலுவலா்களுக்கு உத்தரவிட்டனா்.

இந்த நிலையில், உதவி செயற்பொறியாளா்கள் முத்தமிழ், குமாா், சரவணன், ரமேஷ், சிவசக்தி, உஷா ஆகியோரது தலைமையில், பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றும் பணி நடைபெற்றது.

அப்போது அலுவலா்களுக்கும், வியாபாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மாதவரம் காவல் ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையில் போலீஸாா், நடைபாதை வியாபாரிகளிடம் பேச்சு நடத்தினா். இதில், வியாபாரிகளுக்கு 7 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டு, தற்காலிகமாக கடைகளை அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT