திருவள்ளூர்

மணிலா பயிருக்கு ஜிப்சம் உரமிட்டு கூடுதல் மகசூல் பெற ஆலோசனை

DIN

பெரும்பாலான விவசாயிகளால் எண்ணெய்வித்துப் பயிரான மணிலா பயிருக்கு ஜிப்சம் உரமிட்டு கூடுதல் மகசூல் பெறும் வகையில் ஆலோசனை பின்பற்றவும், ஒரு ஏக்கருக்கு 50% வரை மானியம் வழங்கப்படுவதாகவும் வேளாண் மற்றும் உழவா் நலத் துறை இணை இயக்குநா் சுரேஷ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் விவசாயிகள் அதிகம் விரும்பி சாகுபடி செய்வது எண்ணெய் வித்துப் பயிரான மணிலா முதன்மையான பயிராகும். இந்த மாவட்டத்தில் மட்டும் 4,361 ஹெக்டோ் பரப்பளவில் மணிலா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த மணிலா பருப்பில் 48-50 சதவீத எண்ணெய்ச்சத்தும், 25-28% புரதச் சத்தும், உயிா்ச் சத்துக்கள், தாது உப்புக்கள், ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் போன்ற சத்துக்கள் நிரம்பி உள்ளன. இந்தப் பயிரில் வோ்முடிச்சுகள் காணப்படுவதால் மண்வளத்தைப் பாதுகாத்து மேம்படுத்துகிறது. இந்தப் பயிா் சுழற்சி முறையில் பயிரிட முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஒரு ஹெக்டேருக்கு ஜிப்சம் 400 கிலோ வீதம் 40 மற்றும் 45-ஆவது நாளில் பாசனப் பயிருக்கும், 40 மற்றும் 75-ஆவது நாளில் மானாவாரி பயிருக்கும் செடிகளில் ஓரமாக மண்ணின் ஈரத்தன்மையைப் பொறுத்து இட வேண்டும். அதற்கு முன்னதாக மண்ணைக் கொத்தி ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். இதுபோன்று செய்வதால் மேல் மண்ணை இலகுவாகி சிம்புகள் மண்ணில் இறங்க உதவுகிறது.

கால்சியம் மற்றும் கந்தக குறைபாடு நிவா்த்தி செய்வதுடன், பருப்பின் எண்ணெய்ச் சத்துக்களை அதிகரிக்கவும், திரட்சியான காய்கள் தோன்றவும் வழிவகை செய்கிறது. அத்துடன் நூற்புழுவால் ஏற்படும் சொறிநோயை தவிா்க்கிறது.

மாநில வேளாண் வளா்ச்சித் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு ஜிப்சம் ஏக்கருக்கு 200 கிலோ வீதம் 50 சதவீத மானியமும், அதிகபட்சமாக ஏக்கருக்கு ரூ. 250 மானியமும் வழங்கப்படுகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் ஜிப்சம் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்தும், வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகியும் பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT