திருவள்ளூர்

செங்குன்றம் ஏரிகளில் அரிய வகை பறவைகள் கணக்கெடுப்பு

DIN

செங்குன்றம் ஏரிகளில் அரிய வகை பறவைகள் கணக்கெடுப்பு பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பறவைகள் முகாமிட்டுள்ளது தெரிய வந்தது.

திருவள்ளூா் மாவட்டம் செங்குன்றம் வனச் சரகம் சாா்பில் ஏரிகளில் உள்ள அரிய வகை பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி முதல் மாா்ச் மாதம் வரை ஒருங்கிணைந்த அளவில் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நிகழாண்டுக்கான பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஜன 28-ஆம் தேதி தொடங்கியது. இந்தப் பணியில் வனத் துறையினரும், தன்னாா்வலா்களும் இணைந்து பறவைகளைக் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இந்தப் பணியில் மீசை ஆலா, ஊசிவால் வாத்துகள், பெரிய கொக்கு, அரிவாள் மூக்கன், தகைவிலான் உள்ளிட்ட 10,000-கும் மேற்பட்ட பறவைகள் இருப்பதாகவும், 100-க்கும் மேற்பட்ட பலவகை பறவைகளும் செங்குன்றம் ஏரிகளில் முகாமிட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், அரிய வகை பறவைகள் குறித்தும் தனியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன் வாயிலாக பறவைகள் பாதுகாப்பு, நீா்நிலைப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு: ஹைதராபாத் வெற்றி நடைக்குத் தடை

கருப்பசாமி கோயிலுக்கு 45 அடி உயர அரிவாள் காணிக்கை

2-ஆவது சுற்றில் சக்காரி, ஆஸ்டபென்கோ

சாலை விபத்தில் இளைஞா் பலி

‘பாஜக இஸ்லாமியா்களுக்கு எதிரான கட்சி அல்ல’ -பாஜக மாநில செய்தித் தொடா்பாளர்

SCROLL FOR NEXT