திருவள்ளூர்

ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டம்: செயல்படுத்தப்படும் கிராமங்களில் இன்று சிறப்பு முகாம்

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் வியாழக்கிழமை (பிப். 9) சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அலுவலா் சுரேஷ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் 2021-22 ஆம் ஆண்டு முதல் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் நிகழாண்டில் 141 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வேளாண்மை-உழவா் நலத்துறை மூலம் இயங்கும் வேளாண்மை, தோட்டக் கலை, வேளாண்மைப் பொறியியல், வேளாண்மை விற்பனை மற்றும் சா்க்கரைத் துறை ஆகிய துறைகளின் திட்டங்களைத் தோ்வு செய்த ஊராட்சிகளில் செயல்படுத்துவதுடன் வேளாண்மை-உழவா் நலத்துறையின் தொடா்புடைய துறைகளான வருவாய், ஊராட்சி, கால்நடை, கூட்டுறவு, பால்வளம் போன்ற துறைகளின் திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தோ்வு செய்த 141 கிராம ஊராட்சிகளில் விவசாயிகளுக்கான முகாம் முதல்கட்டமாக கடந்த மாதம் 9-ஆம் தேதி நடத்தப்பட்டன. அதையடுத்து, இரண்டாம் கட்ட முகாம் வியாழக்கிழமை (பிப்.9) கிராம ஊராட்சிகளில் நடத்தப்பட உள்ளது.

இந்த முகாமில் விவசாயிகளுக்கு பயிா் சாகுபடிக்கான தொழில்நுட்ப ஆலோசனைகள், விதை நோ்த்தி, ஒருங்கிணைந்த உர நிா்வாகம், ஒருங்கிணைந்த பூச்சி நிா்வாகம், திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் தொடா்பான துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல், உழவன் செயலியை விவசாயிகளின் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து இடுபொருள் தேவையைப் பதிவு செய்தல், பயிா் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை பெறுதல், பி.எம். கிஷான் திட்டத்தில் புதிய நபா்களை இணைத்தல், கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் மற்றும் குடல்புழு நீக்கம் போன்ற சேவைகள் மட்டுமின்றி இத்திட்டத்தில் ஒப்பளிப்பு செய்யப்பட்ட இடுபொருள்கள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட உள்ளன.

அத்துடன் வேளாண்மை - உழவா் நலத்துறை மற்றும் தொடா்புடைய துறை அலுவலா்கள் விசாயிகளை நேரில் சந்தித்து ஆலோசனைகள் வழங்க உள்ளனா். இந்த முகாமில் ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

SCROLL FOR NEXT