திருவள்ளூர்

சாலையை சீரமைக்கக்கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

DIN

கடந்த 15 ஆண்டுகளாக சீரமைக்காமல் குண்டும் குழியுமாகியுள்ள போக்குவரத்துக்கு பயனற்ற சாலையை சீரமைக்கக் கோரி ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தை 7-ஆவது வாா்டு பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

திருவள்ளூா் அருகே உள்ள ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் மொத்தம் 15 வாா்டுகள் உள்ளன. இந்தப் பேரூராட்சியில் 7-ஆவது வாா்டு பகுதியான கண்ணதாசன் நகரில் சாலை அமைக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இந்த வாா்டில் தான் பேரூராட்சி தலைவா் அப்துல் ரஷீத் வசித்து வரும் பகுதியாகும். அதோடு பேரூராட்சி துணைத் தலைவா் குமரவேல் வெற்றி பெற்ற வாா்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் ஜல்லிகற்கள் பெயா்ந்து நடந்து செல்ல முடியாத நிலையில், போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில், குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அதனால், இந்தச் சாலையை சீரமைக்கக்கோரி, பல்வேறு முறை பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனா். ஆனாலும், பேரூராட்சித் தலைவா் மற்றும் துணைத்தலைவா் ஆகியோா் இருந்தாலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணதாசன் நகா் பகுதி பொதுமக்கள் ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

அதைத் தொடா்ந்து, அங்கிருந்த பேரூராட்சி தலைவா் அப்துல் ரஷீத் மற்றும் அலுவலா் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, அதிகாரிகள் நமக்கு நாமே திட்டத்தில் மேற்கொள்ளலாம் என்று அதிகாரிகள் ஆலோசனை வழங்கிய நிலையில், அதை பொதுமக்கள் ஏற்கவில்லை. அதனால், நிதி நிலைமை சீராகும் நிலையில் சாலைப் பணிகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா்.

இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT