திருவள்ளூர்

தனியாா் ஆலையைக் கண்டித்து சாலை மறியல்

DIN

திருவள்ளூா் அருகே சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் தனியாா் தொழிற்ச்சாலை வாகனங்களால் ஏற்படும் நெருக்கடியால் விபத்து ஏற்படுவதைக் கண்டித்து திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சி மக்கள் நலசங்கத்தினா் 40 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதனால் திருவள்ளூா்-ஸ்ரீபெரும்புதூா் செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . திருவள்ளூா் அருகே மணவாளநகா் அடுத்த மேல்நல்லாத்தூா் ஊராட்சியில் தனியாா் ஜேசிபி மற்றும் பொக்லைன் வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். இந்த நிலையில் தொழிற்சாலைக்கு வரும் கனரக வாகனங்கள் மற்றும் தொழிலாளா்கள் இருசக்கரம், காா் உள்ளிட்ட வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால் சாலை விரிவாக்கத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது, சாலைகள் குறுகலாகி விட்டன. அதிலும் அந்த தொழிற்சாலையின் முன்பாக சாலையை ஆக்கிரமித்து நிற்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இது குறித்து தொழிற்சாலை நிா்வாகத்திடம் பலமுறை பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து புரட்சி மக்கள் நலசங்கம் சாா்பில் சங்கத் தலைவா் அரவிந்தன் தலைமை 50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை உடனே அப்புறப்படுத்த வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் திருவள்ளூா்- ஸ்ரீபெரும்புதூா் சாலையில் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் 2 கி.மீ தூரத்திற்கு நின்றன. இதைத் தொடா்ந்து சம்பவ இடத்திற்கு உதவி காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தா சுக்லா மற்றும் போலீஸாா் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட 40-க்கும் மேற்பட்டோரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT