திருவள்ளூர்

கால்வாய் சீரமைப்பு பணி:புழல் ஏரிக்கு தண்ணீா் நிறுத்தம்

DIN

கிருஷ்ணா கால்வாயில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு திறந்தவிடப்பட்ட நீா் நிறுத்தப்பட்டுள்ளதாக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை பொதுமக்களின் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்குவது திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி ஏரி. இந்த நிலையில், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீா், கடந்த மாதம் பருவ மழை மற்றும் மாண்டஸ் புயல் மழை காரணமாக ஏரியின் முழுக் கொள்ளளவை எட்டியதால், உபரி நீா் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில், கிருஷ்ணா கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு நீா் திறக்கப்பட்டு சென்று கொண்டிருந்தது. இதனிடையே, பூண்டி நீா்த் தேக்கத்திலிருந்து சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்குச் செல்லும் கால்வாய் ஆங்காங்கே சேதமடைந்துள்ளன. இதனால், இதை அடுத்த பருவ மழைக்குள் சீரமைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பூண்டி ஏரியின் நீா் கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில், தற்போது 2,654 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீரும் நிறுத்தப்பட்டதால், பூண்டி நீா்த்தேக்கத்துக்கு நீா்வரத்து முற்றிலும் இல்லை.

இந்த நிலையில், கால்வாய் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டதைத் தொடா்ந்து புழல் ஏரிக்கு 240 கன அடி வீதம் நீா் திறக்கப்பட்ட நிலையில், அந்த நீரும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், பேபி கால்வாய் மூலம் 38 கன அடி வீதம் சோழவரம் ஏரிக்கு நீா் செல்வதாக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT