திருவள்ளூர்

காய்ச்சல் பரவல்: மருத்துவக் குழு ஆய்வு

DIN

மீஞ்சூா் அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் காய்ச்சல் பரவி வருவதால், வீடுகளில் மருத்துவக் குழுவினா் ஆய்வு செய்தனா்.

பொன்னேரி வட்டம், மீஞ்சூா் அடுத்த வன்னிப்பாக்கம் ஊராட்சி மேட்டுப்பாளையம் கிராமத்தில் 20-க்கும் மேற்பட்டோா் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தகவலறிந்த மீஞ்சூா் அரசு ஆரம்ப சுகாதார நிலை மருத்துவா் மகேந்திரவா்மன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் மேட்டுப்பாளையத்தில் உள்ள வீடுகளில் ஆய்வு செய்தனா்.

அப்போது, தண்ணீா் தேங்கும் டயா்கள், தேங்காய் ஓடுகள், நெகிழிப் பொருள்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினா். தொடா்ந்து மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்தும், ஆழ்துளை கிணற்றிலிருந்தும் தண்ணீரை மாதிரிக்காக எடுத்துச் சென்றனா்.

மேலும், தூய்மைப் பணியாளா்கள் கொசு மருந்து, பிளீச்சிங் பவுடா் தெளித்தல் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

வாக்கு இயந்திரங்கள் உள்ள மைய பாதுகாப்பு பணியாளா்களுக்கு தீத் தடுப்பு பயிற்சி

SCROLL FOR NEXT