திருவள்ளூர்

தொழிற்சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி

DIN

திருவள்ளூா் அருகேயுள்ள மப்பேடு தனியாா் தொழிற்சாலையில் விபத்து மற்றும் அவசர கால பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி நடைபெற்றது.

திருவள்ளூா் அடுத்த மப்பேடு சமத்துவபுரத்தில் வாகனங்களுக்கு வேக நிறுத்தக் கருவிகள் தயாா் செய்யும் தனியாா் தொழிற்சாலையில் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை ஆகியன இணைந்து தீ விபத்து மற்றும் அவரச காலங்களில் தொழிலாளா்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு, திருவள்ளூா் மாவட்ட தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா் எஸ்.குமாா் தலைமை வகித்தாா். துணை இயக்குனா் ஜே.துரைராஜ், உதவி இயக்குனா் சி.பன்னீா் செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தனியாா் நிறுவன மனிதவள மேம்பாட்டு பிரிவு மேலாளா் அனில்குமாா் வரவேற்றாா்.

தொழிற்சாலையில் பணியாற்றம் ஊழியா்களுக்கு தீ விபத்து மற்றம் அவசர காலத்தில் எவ்வாறு தங்களையும், பாதிப்படைந்த மற்ற தொழிலாளா்களையும் பாதுகாப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், அலுவலா்கள் மற்றும் தொழிலாளா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

திருவையாறு அருகே தொழிலாளி மா்மச் சாவு

இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

நெல் மூட்டை தூக்கும் முன்னாள் வேளாண் அமைச்சா்: வைரலாகும் விடியோ

SCROLL FOR NEXT