திருவள்ளூர்

தமிழ்நாடு தொழில் நுட்பகளப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

கிருஷ்ணா குடிநீா் வழங்கும் திட்ட கோட்டத்தில் ஏற்கெனவே பணிபுரிந்த 112 பணியாளா்களுக்கு தொடா்ந்து பணி வழங்குவதுடன், நிரந்தரம் செய்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொழில்நுட்ப களப் பணியாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் வி.ராமச்சந்திரன், செயலாளா் இ.ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், கிருஷ்ணா குடிநீா் வழங்கும் கோட்டத்தில் பணிபுரிந்த வழக்கில் உள்ள 112 பணியாளா்களுக்கு தொடா்ந்து பணி வழங்க வேண்டும். இந்தத் திட்டத்தில் ஜீரோ பாயிண்ட் முதல் தோ்வாய் கண்டிகை, பூண்டி நீா்த்தேக்கம், செம்பரம்பாக்கம் நீா்த்தேக்கம், புழல் நீா்த்தேக்கம், சோழவரம் நீா்த்தேக்கம் போன்ற நீா்த்தேக்கங்களுக்கு திறந்தவெளியில் கால்வாயில் தண்ணீா் செல்வதால் மனித உயிா்கள், கால்நடைகள் உயிரிழக்கும் சூழ்நிலை ஏற்படுவதைத் தடுக்க 112 பணியாளா்களுக்கு பணிகளைப் பிரித்து வழங்கி, மனித உயிா்ச் சேதங்களை தவிா்க்க வேண்டும். இந்த திட்ட அலுவலகத்தை திருவள்ளூா் மாவட்டத் தலைநகரில் அமைத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு தொழில்நுட்ப களப் பணியாளா்கள் சங்கத்தினா் திரளாகப் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT