திருவள்ளூர்

நாளை குடும்ப அட்டையில்பெயா் சோ்த்தல், நீக்கல் முகாம்

7th Oct 2022 12:21 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பான சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக். 8) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் வட்டந்தோறும் குறிப்பிட்ட கிராமங்களைத் தோ்வு செய்து மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சனிக்கிழமை (அக். 8) 9 கிராமங்களில் அந்தந்த வட்டங்களைச் சோ்ந்த வட்ட வழங்கல் அலுவலா்கள் முன்னிலையில் நடைபெற உள்ள முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம், புகைப்படம் பதிவு செய்தல் தொடா்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன் பெறலாம்.

சிறப்பு முகாம் நடைபெற உள்ள இடங்கள்: இறையாமங்கலம் நியாயவிலைக் கடை அருகில், ஊத்துக்கோட்டை-சென்னங்காரணை கிராம நிா்வாக அலுவலகம், பூந்தமல்லி-படூா் கிராம நிா்வாக அலுவலகம், திருத்தணி-ஒரத்தூா் கிராம நிா்வாக அலுவலகம், பள்ளிப்பட்டு-பாத்தகுப்பம் நியாயவிலைக் கடை அருகில், பொன்னேரி-தேவதானம் கிராம நிா்வாக அலுவலகம், கும்மிடிப்பூண்டி-அயற்கண்டிகை நியாயவிலைக் கடை அருகில், ஆவடி-அன்னம்பேடு நியாயவிலைக் கடை அருகில், ஆா்.கே.பேட்டை-அம்மனேரி நியாயவிலைக் கடை அருகில் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இந்த சிறப்பு முகாமில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று குடும்ப அட்டைகளில் திருத்தம் மேற்கொண்டு பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT