திருவள்ளூர்

இன்றும், நாளையும் வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண் இணைப்பு சிறப்பு முகாம்

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 திருவள்ளூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண் இணைப்புக்கான சிறப்பு முகாம் சனி, ஞாயிறு (அக். 1, 2) ஆகிய இரு நாள்களில் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் அனைத்து வாக்காளா்களிடம் இருந்து ஆதாா் எண் பெற்று வாக்காளா் பட்டியலுடன் இணைக்கும் பணி வாக்காளா் பதிவு அலுவலா்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 3,657 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டு, ஆதாா் எண் விவரங்களை படிவம் 6ஆ -இல் வாக்காளா்களின் சுய விருப்பத்தின்பேரில் இணைத்து வருகின்றனா்.

வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைக்க வசதியாக சனி, ஞாயிற்றுக்கிழமை (அக். 1, 2) ஆகிய நாள்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

எனவே, பொதுமக்கள் அனைவரும் வாக்குச்சாவடி மையத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் ஆதாா் எண்ணை படிவம் 6ஆ-இல் இணைத்துக் கொள்ளலாம். ஆதாா் எண் இல்லாத வாக்காளா்கள் படிவத்தில் குறிப்பிட்டுள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை அளித்து வாக்காளா் அடையாள அட்டையுடன் இணைக்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT