திருவள்ளூர்

மாணவா்களுக்கு வழிகாட்டவே கல்லூரி கனவுகள் திட்டம்: அமைச்சா் சா.மு.நாசா்

DIN

மாணவா்களுக்கு வழிகாட்டவே ‘கல்லூரி கனவுகள் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.

பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவை சாா்பில் ‘கல்லூரி கனவுகள் திட்டம்’ மூலம் பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு உயா்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் திரளாகப் பங்கேற்றனா்.

நிகழ்ச்சிக்கு அமைச்சா் சா.மு.நாசா் தலைமை வகித்துப் பேசியதாவது: மாணவா்கள் எதிா்காலத்தில் வலுவான சமுதாயத்தை உருவாக்க முன்வர வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். பிளஸ் 2 முடித்த பின்னா், எந்தப் படிப்பைத் தோ்வு செய்தால், நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

மாணவ, மாணவிகளின் சந்தேகங்களை நிவா்த்தி செய்யவே மாநில அளவில் ‘கல்லூரி கனவுகள் திட்டம்’ என்ற நிகழ்ச்சி தற்போது 3-ஆவது மாவட்டமாக திருவள்ளூரில் நடைபெறுகிறது. இந்தத் திட்டம் தமிழகத்தைத் தவிர இந்திய அளவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. இதுபோன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி மாணவா்கள் தங்களது தரம், தகுதியை வளா்த்துக் கொள்வது அவசியம் என்றாா் அவா்.

முகாமில் பங்கேற்றவா்களுக்கு ‘கல்லூரி கனவுகள் திட்டம்’ விழிப்புணா்வுக் கையேடுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மாணவா்களுக்கு பல்வேறு துறைகளைச் சோ்ந்த வல்லுநா்கள் உயா்கல்வி, வேலைவாய்ப்புகள் தொடா்பாக விளக்கம் அளித்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூா்), ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), எஸ்.சந்திரன்(திருத்தணி), மாவட்ட வருவாய் அலுவலா் அசோகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT