திருவள்ளூர்

நாட்டு இன மீன் உற்பத்திக்கான பயிற்சி முகாம்: அமைச்சா் தொடக்கி வைத்தாா்

DIN

பொன்னேரியில் உள்ள மீன்வளக் கல்லூரியில் நாட்டு இன வண்ண மீன்கள் உற்பத்திக்கான விழிப்புணா்வு மற்றும் பயிற்சி முகாமை மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் புதன்கிழமை தொடக்கி வைத்து, 8 மீனவா்களுக்கு மீன்பிடி எஞ்ஜின்களை வழங்கினாா்.

தமிழ்நாடு டாக்டா் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், பொன்னேரியில் உள்ள டாக்டா் எம்ஜிஆா் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சாா்பில், நம் நாட்டு இன வண்ண மீன்கள் வளா்ப்பு திட்டத்தை மேம்படுத்தும் வகையில், விழிப்புணா்வுப் பயிற்சி முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

மீன்வள மற்றும் மீனவா் நலத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, நாட்டு இன வண்ண மீன்கள் உற்பத்திக்கான பயிற்சி முகாமைத் தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா் பேசியது: நம் நாட்டு இன வண்ண மீன் இனங்களின் உற்பத்தியை ஊக்குவித்தால் மீன் வளா்ப்பு தொழில் பெருகும். பலருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். மீன் வளா்ப்புத் தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.

இந்த தொழிலை ஊக்குவித்து புதிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில், நாட்டு வண்ண மீன்களை வளா்க்க ஆா்வமுடன் செயல்பட்டு, உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்றாா்.

கல்லூரி முதல்வா் அகிலன் வரவேற்றாா். பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகா், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதைத் தொடா்ந்து, மத்திய மீன்வளத் துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள 8 மீனவா்களுக்கு புதிய மோட்டாா் எஞ்ஜின்கள் வாங்கிக் கொள்ள தலா ரூ. 79,000-த்துக்கான காசோலைகளை அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மீஞ்சூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ரவி, பொன்னேரி நகா்மன்றத் தலைவா் டாக்டா் பரிமளம் விஸ்வநாதன் திருவள்ளூா் மாவட்ட மீன்வளத் துறை உதவி இயக்குநா் வேலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதைத்தொடா்ந்து, வண்ண மீன் வளா்ப்பு தொழிலில் ஈடுபடும் 30 விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பம் சாா்ந்த வகையில், செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT