திருவள்ளூர்

அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு தற்காலிக நியமனம்

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்ப உள்ளதால், தகுதியானோா் வரும் 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என முதன்மைக் கல்வி அலுவலா் ராமன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில், ஊராட்சி ஒன்றியம், நகராட்சிகளில் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் 2022-23 கல்வியாண்டில் 1.6.2022 நிலவரப்படி, காலியாகவுள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியா் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்கள் மாணவ, மாணவிகள் கல்வி கற்பதில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதற்காக தற்காலிகமாக ஆசிரியா் நியமனம் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே ஒவ்வொரு பள்ளிகள் வாரியாக காலிப்பணியிட விவரங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகங்களில் தகவல் பலகையில் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கு தகுதியானோா் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித் தகுதி சான்றுகளுடன் தொடா்புடைய அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமா்ப்பிக்கலாம். அதன்பேரில், திருத்தணி கல்வி மாவட்டம்-திருவள்ளூா் கல்வி மாவட்டம், ஆவடி கல்வி மாவட்டம், அம்பத்தூா் கல்வி மாவட்டம், பொன்னேரி கல்வி மாவட்டம்.

மேற்குறிப்பிட்ட இணையதள முகவரி மூலம் வரும் 6-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேரும் வகையில், அனுப்பி வைத்து பயன்பெறலாம். மேலும், அன்றைய நாளில் குறிப்பிட்ட நேரத்துக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT