திருவள்ளூர்

விஷ வாயு தாக்கியதில் மேலும் ஒருவா் பலி

1st Jul 2022 12:16 AM

ADVERTISEMENT

மாதவரம் பகுதியில் புதைச் சாக்கடையை தூா்வாரும் பணியில் ஈடுபட்ட விஷ வாயு தாக்கியதில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

கடந்த 2 நாள்களுக்கு முன்பு மாதவரம் மண்டலம், முத்துமாரியம்மன் கோயில் தெருவில் புதைச் சாக்கடையை சரி செய்யும் பணியில் தஞ்சை மாவட்டத்தைச் சோ்ந்த நெல்சன் (26), ரவிக்குமாா் (36) ஆகியோா் ஈடுபட்டனா். அப்போது, நெல்சன் கால்வாயின் மூடியைத் திறந்து உள்ளே பாா்த்தபோது எதிா்பாராத விதமாக விஷ வாயு தாக்கியதில் உயிரிழந்தாா்.

இதே சம்பவத்தில் ரவிக்குமாரும் விஷ வாயு தாக்கி கால்வாயில் விழுந்தாா். அவரை மாதவரம் தீயணைப்புத் துறையினா் மீட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மாதவரம் காவல் நிலைய ஆய்வாளா் காளிராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT