திருவள்ளூர்

பெரியபாளையத்தம்மன் கோயில் நகைகள் தங்கப் பத்திரத்தில் முதலீடு: ஆண்டுக்கு ரூ.1 கோடி கிடைக்கும்; அமைச்சா் பி.கே.சேகா்பாபு

1st Jul 2022 12:15 AM

ADVERTISEMENT

பெரியபாளையத்தம்மன் கோயில் நகைகளை உருக்கி வங்கியில் தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.1 கோடி கிடைக்கும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்திய 132 கிலோ தங்க நகைகளை உருக்கி சுத்தத் தங்கமாக மாற்றி, வங்கியில் முதலீடு செய்யும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமை வகித்து, உருக்கப்பட்ட நகைகளை பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைத்த பின்னா் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக கோயில்களில் காணிக்கையாகச் செலுத்தப்பட்டு உபயோகப்படுத்தப்படாமல் உள்ள நகைகளை உருக்கி, தங்கமாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்யப்படும் என அறிவித்தோம்.

அதன் முதல் கட்டமாக, விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் நகைகள் பாரத ஸ்டேட் வங்கி சாத்தூா் கிளையில் ஒப்படைக்கப்பட்டன. தொடா்ந்து, திருவள்ளூா் மாவட்டம், பெரியபாளையத்தம்மன் கோயில் உண்டியல் நகைகளை சொக்கத் தங்கமாக மாற்றி (132 கிலோ 150 கிராம்) ஸ்டேட் வங்கி மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றாா் அவா்.

ADVERTISEMENT

நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை அரசு முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், ஆணையா் ஜெ.குமரகுருபரன், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜீ, ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், எம்.எல்.ஏக்கள் டி.ஜெ.கோவிந்தராசன் (கும்மிடிப்பூண்டி) துரை.சந்திரசேகா் (பொன்னேரி), பரம்பரை அறங்காவலா் அஞ்சன் லோகமித்ரா, பாரத ஸ்டேட் வங்கி (அம்பத்தூா்) மண்டல மேலாளா் ராஜலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT