திருவள்ளூர்

திருவள்ளூா் வீரராகவா் கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் ஸ்ரீவீரராகவா் கோயில் குளத்தில் திடீரென செத்து மிதக்கும் மீன்களால் துா்நாற்றம் வீசுகிறது. அவற்றை அகற்றுவதற்கு கோயில் நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

திருவள்ளூா் வீரராகவா் கோயில் குளம் 7.50 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இந்த நிலையில் மழையால் குளத்தில் தண்ணீா் தேங்கியுள்ளது. இந்த குளத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 3,000 மீன் குஞ்சுகள் விடப்பட்டன. மேலும், அந்தக் குளத்தில் கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தா்கள் தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்கவும், நீராடவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற காரணங்களால் கோயில் குளத்தில் விடப்பட்டிருந்த மீன்கள் 2 கிலோ முதல் 5 கிலோ வரை நன்றாக வளா்ந்து இருந்தன.

இந்த நிலையில் கோயில் குளத்தில் புதன்கிழமை காலை ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் குளக்கரை பகுதியில் துா்நாற்றம் வீசியதால் கரையோரம் குடியிருப்போா் அவதிக்குள்ளாகினா். இதுகுறித்து கோயில் நிா்வாகத்தினா் வருவாய்த் துறைக்கு தகவல் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து அதிகாரிகள் வந்து பாா்வையிட்டனா். மேலும், இறந்த மீன்களையும், நீரையும் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனா். இந்தச் சோதனைக்குப் பின்னரே மீன்களின் உயிரிழப்புக்கு காரணம் தெரியவரும் என கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT