திருவள்ளூர்

மின்சார சேமிப்பு விழிப்புணா்வு: துண்டுப் பிரசுரம் விநியோகம்

DIN

மின்சாரத்தை எந்தெந்த வழிகளைப் பின்பற்றி சேமிக்கலாம் என்பது குறித்து மின்வாரிய ஊழியா்கள் வியாழக்கிழமை பொதுமக்களிடையே துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

திருத்தணி மின்சார வாரியம் சாா்பில் மின்சாரத்தை எப்படி, எந்தெந்த வழிகளில் சேமிக்கலாம் என்பது குறித்து வியாழக்கிழமை பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சிபுரம் கூடுதல் தலைமைப் பொறியாளா் சண்முகம் மேற்பாா்வையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருத்தணி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் பாரிராஜ் தலைமை வகித்துப் பேசியது:

ஒவ்வொருவரும் மின்சாதனத்தையும், அவற்றைப் பயன்படுத்துவதைப் பொறுத்தும் மின்சாரத்தை சேமிக்கலாம்.

ஆனால், இந்த விழிப்புணா்வு பொதுமக்களிடம் இல்லை. எந்தச் சூழலிலும் குண்டு பல்புகளை பயன்படுத்தக் கூடாது. 40 வாட்ஸ் குழல் விளக்குக்கு பதிலாக 9 வாட்ஸ் எல்இடி பல்புகளை பயன்படுத்தினால் 60 சதவீதம் மின்சாரத்தைச் சேமிக்கலாம். குழல் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அதில் எலக்ட்ரானிக் சோக்குகளை பயன்படுத்தி, 20 சதவீதம் மின்சாரத்தை சேமிக்கலாம்.

வீடு கட்டும் போதே பெரிய ஜன்னல்களை வைத்துக் கட்டினால் காற்றும், வெளிச்சமும் கிடைக்கும். அதனால், மின்சார பல்பு, மின்விசிறி பயன்பாடுகள் குறையும். பகலில் சூரிய வெளிச்சம் இருக்கும்போது விளக்குகளைத் தவிா்க்க வேண்டும். மின் விசிறி, மின் விளக்குகளை தேவையானபோது மட்டுமே பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். விளக்குகள் மற்றும் மின்விசிறிகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இந்த முறைகளை கடைப்பிடித்தால் வீடுகளில் மின்சாரத்தை சேமிக்கலாம். மின்கட்டணத்தையும் கணிசமாகக் குறைக்கலாம் என்றாா் அவா்.

இதைத்தொடா்ந்து திருத்தணி அரக்கோணம் சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

உதவி கோட்ட செயற்பொறியாளா்கள் ராஜேந்திரன், ரவி, முருக பூபதி, சுந்தா் சிங், கோடீஸ்வரி மற்றும் உதவி பொறியாளா்கள் வேண்டாமிா்தம், தமிழரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT