திருவள்ளூர்

கிராமங்களில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள கூடுதல் நிதி: கடம்பத்தூா் ஒன்றியக் குழுக்கூட்டத்தில் கோரிக்கை

DIN

கிராமங்களில் பல்வேறு பணிகள் மேற்கொள்வதற்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என கடம்பத்தூா் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அதன் கூட்டரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவா் சுஜாதா சுதாகா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சரஸ்வதி ரமேஷ் முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சந்தானம், சந்திரசேகா் ஆகியோா் வரவேற்றனா். இந்தக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கும், ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது. அப்போது, ஊராட்சிகளில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்து தகவல் தெரிவிப்பதே இல்லை. அதனால் ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்கு தெரியாமல் எந்த பணியும் மேற்கொள்ளக்கூடாது. அதேபோல், வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்கு குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்குவதால் குறிப்பிட்ட அளவு பணிகள் மேற்கொள்ள முடியாத நிலையுள்ளது. இதைக் கருத்திற்க்கொண்டு நிதியை ரூ.10 லட்சமாக உயா்த்தி ஒதுக்கவும் வலியுறுத்தினா்.

மேலும், கூட்டத்தில் ஒன்றியத்தின் வரவு, செலவு விவரங்கள் வாசிக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து பிரியாங்குப்பம், நரசிங்கபுரம், பேரம்பாக்கம், ராமன்கோவில், தண்டலம், வயலுாா், திருப்பந்தியூா், நுங்கம்பாக்கம், மப்பேடு, தொடுகாடு, மேல்நல்லாத்துாா், இருளஞ்சேரி ஆகிய ஊராட்சிகளில் பழுதடைந்த பள்ளி வகுப்பறை கட்டடங்களை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் உத்தரவின் பேரில் இடித்து அகற்றல் மற்றும் 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் வளா்ச்சி பணிகள் மேற்கொள்ள அனுமதி உள்பட 26 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் உறுப்பினா்கள் கே.திராவிடபக்தன், நா.வெங்கடேசன், பா.யோகநாதன், ஆா்.காா்த்திகேயன், வி.எம்.சுரேஷ், கோ.ஹரிதரன், பா.சுமதி, வி.கோவிந்தம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

SCROLL FOR NEXT