திருவள்ளூர்

 பிளஸ் 2 மாணவி தற்கொலை சம்பவம்: 17 நாள்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் பள்ளி திறப்பு

DIN

திருவள்ளூர் அருகே கீழச்சேரி அரசு நிதி உதவி பெறும் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்கு பின்னர், 17 நாள்கள் கழித்து புதன்கிழமை பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது.
 திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி விடுதியில் திருத்தணி அருகே தெக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி தங்கிப் படித்து வந்தார். இவர், கடந்த மாதம் 25-ஆம் தேதி விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
 இந்தப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 859 மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், திருத்தணி அருகே தெக்கலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து 83 மாணவிகள் பள்ளி விடுதியில் தங்கிப் பயின்று வருகின்றனர்.
 இந்த நிலையில், மாணவியின் தற்கொலைக்கு பின்னர், கடந்த மாதம் 25-ஆம் தேதி முதல் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி போலீஸார் பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், உடன் பயிலும் மாணவிகள், உறவினர்களிடமும விசாரணை மேற்கொண்டனர்.
 மேலும், அந்த பள்ளி மாணவிகளின் நிலை குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் விசாரணை நடத்தினார்.
 இந்த நிலையில், மாணவிகள் கல்வி கற்பதில் உள்ள சிரமத்தைக் கருத்தில் கொண்டு 17 நாள்களுக்குப் பிறகு மீண்டும் புதன்கிழமை பள்ளி திறக்கப்பட்டது. மொத்தம் 859 மாணவிகளில் புதன்கிழமை 621 மாணவிகளே பள்ளிக்கு வந்தனர்.
 அந்தப் பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த தெக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள் உள்பட 23 மாணவிகள் மாற்றுச் சான்றிதழைப் பெற்று வேறு பள்ளிகள் சேர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு சில மாணவிகள் வீட்டிலிருந்து வந்தே படித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளதால், பள்ளி விடுதி மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT