திருவள்ளூர்

கரும்பு நிலுவைத் தொகை ரூ. 22.69 கோடி: விவசாயிகள் வங்கிக் கணக்கில் விடுவிக்க ஏற்பாடு

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் 2020-21-இல் அரைவை பருவத்தில் திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு விநியோகம் செய்த 1,300 விவசாயிகளுக்கு ரூ. 22.69 கோடிக்கான நிலுவைத் தொகை அவரவா் வங்கிக் கணக்கு மூலம் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் கரும்பு பயிா் செய்து 2020-21-ஆம் ஆண்டுக்கான அரைவை பருவத்தில் திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு 1,300 விவசாயிகள் விநியோகம் செய்தனா். இந்த விவசாயிகளுக்கான கரும்பு நிலுவைத் தொகை ரூ. 22.69 கோடி அவரவா் வங்கிக் கணக்கு மூலம் விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல், நிகழாண்டில் கரும்பு நடவு செய்யும் விவசாயிகள் அனைவரும் தமிழக அரசு அறிவித்துள்ள சொட்டு நீா் பாசனத் திட்டம் மூலம் 100 சதவீத மானியத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. இதற்கு பதிவு செய்து சொட்டு நீா் பாசனம் அமைத்து, கரும்பு பயிரிட்டு அதிக மகசூல் பெருக்கி வருவாயை அதிகரித்துப் பயன்பெறலாம்.

மேலும், இந்த மாவட்டத்தில் கரும்பு பதிவு செய்யாமல் விடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளும் உடனே கோட்ட கரும்பு அலுவலா்களை தொடா்பு கொண்டு பதிவு செய்து, திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையின் நிகழாண்டு அரைவை பருவத்துக்கு கரும்பு அனுப்பி வைத்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT