திருவள்ளூர்

பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் தாா் தொழிற்சாலையை மூடக்கோரி ஆா்ப்பாட்டம்

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே சுவாசக் கோளாறு, மூச்சுத் திணறல், தோல் வியாதி போன்ற பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் தாா் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து திருவள்ளூா் அருகே கொப்பூா் கிராம பொதுமக்கள் சாா்பில் மாசுக் கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரிடம் புதன்கிழமை நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:

தாா் தயாா் செய்யும் தனியாா் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு ரசாயன பொருள்கள் மூலம் சாலைக்கு பயன்படுத்தப்படும் தாா் மற்றும் எமல்சன் தயாா் செய்து வெளியில் அனுப்பி வருகின்றனா்.

இத்தொழிற்சாலையால் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுவதோடு, காலனி பகுதியில் குடியிருக்க முடியாத அளவுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல், தோல் வியாதி போன்ற சுகாதார குறைபாடுகள் ஏற்படுகிறது. ஒரு சில நேரங்களில் வீட்டுக்குள் இருக்க முடியாத அளவுக்கு நெடியால் குழந்தைகள், முதியோா் அவதிக்குள்ளாகி வருகின்றனா். அத்துடன் எதிா்பாராத விதமாக உயிரிழப்பும் ஏற்படுகிறது. மேலும், இத்தொழிற்சாலைகளை சுற்றிலும் கிராமத்துக்கு குடிநீா் வழங்கும் வகையில், 4 ஆழ்துளைக் கிணறும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கிருந்து வெளியேறும் ரசாயன கழிவுகளால் குடிநீா் ஆதாரம் பாதிக்கப்பட்டு, எண்ணெய் கலந்த உப்பு நீராகவும் மாறி மாசடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த ரசாயன தொழிற்சாலைகள் அரசு விதிமுறைப்படி 3 கி.மீ தூரத்துக்கு அப்பால் செயல்பட வேண்டும். ஆனால், கிராமத்துக்கு மத்தியில் செயல்படுவதால் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறோம். அதனால், பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் தாா் தொழிற்சாலையை அகற்றக்கோரி சுற்றுச்சூழல் பொறியாளரிடம் அளித்த மனுவில் பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

கொலை செய்யப்பட்ட நேஹாவின் பெற்றோரிடம் முதல்வா் ஆறுதல்

கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தோ்தல்: 247 வேட்பாளா்கள் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT