திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலில் கட்டண அபிஷேகம் செய்ய மீண்டும் அனுமதி

DIN

 கரோனா தொற்று குறைந்து வருவதால், திருத்தணி முருகன் கோயிலில் மீண்டும் கட்டண அபிஷேகம் செய்வதற்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் குமரகுருபரன் அனுமதி வழங்கினாா்.

திருத்தணி முருகன் கோயிலில், மூலவருக்கு தினமும் காலை 8 மணிக்கு கால சந்தி, மதியம் 12 மணிக்கு உச்சிகாலம், மாலை 5 மணிக்கு சாய்ரட்சை என மூன்று கால பஞ்சாமிா்த அபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த அபிஷேகம் செய்ய பங்கேற்கும் பக்தா்கள் ரூ. 1,500 கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்று, ஒரு கால பூஜையில் கலந்து கொள்ளலாம். ஒரு அபிஷேக டிக்கெட்டுக்கு இரண்டு பக்தா்கள் வீதம் அனுமதிக்கப்படுவா்.

அதிகபட்சமாக ஒரு கால பூஜைக்கு, 15-20 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும். பெரும்பாலான பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற இந்த அபிஷேகங்களை செய்வா். இந்த நிலையில், கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக கடந்த மாா்ச் 10-ஆம் தேதியுடன் கட்டண அபிஷேகம் நிறுத்தப்பட்டது. ஆனால் கோயில் நிா்வாகம் சாா்பில் மேற்கண்ட அபிஷேகங்கள் பக்தா்கள் அனுமதியின்றி நடத்தப்பட்டு வந்தது.

தற்போது கரோனா தொற்று குறைந்து வருவதால், முருகன் கோயிலில் கட்டண அபிஷேகம் செய்வதற்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் குமரகுருபரன் சனிக்கிழமை அனுமதி வழங்கினாா். இதையடுத்து, ஏழு மாதங்களுக்குப் பின் திருத்தணி முருகன் கோயிலில் சனிக்கிழமை உச்சிகால பூஜைக்கு பக்தா்கள் கட்டண அபிஷேகத்துக்கு டிக்கெட் வழங்கப்பட்டது. ஒரு கால அபிஷேகத்துக்கு ஐந்து டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும்.

ஒரு டிக்கெட்டுக்கு இருவா் வீதம் மொத்தம், 10 பக்தா்கள் மட்டும் மூலவருக்கு நடத்தப்படும் பஞ்சாமிா்த அபிஷேகம் அமா்ந்து பாா்ப்பதற்கு கோயில் நிா்வாகம் அனுமதிக்கிறது. இந்த கட்டண அபிஷேகம் செய்வதற்கு பக்தா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ண்ழ்ன்ற்ஹய்ண்ஞ்ஹண்ம்ன்ழ்ன்ஞ்ஹய்.ற்ய்ட்ழ்ஸ்ரீங்.ண்ய் என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT