திருவள்ளூர்

கடனை செலுத்த மகளிா் குழுக்களை வலியுறுத்த கூடாது

DIN

மகளிா் சுய உதவிக் குழுக்களிடம் கடனையோ அல்லது வட்டித் தொகையை செலுத்துவதற்கு அரசு வங்கிகள் மற்றும் சிறு நுண்நிதி நிறுவனங்கள் வலியுறுத்தக் கூடாது எனவும், மீறி கேட்கும் நிறுவனங்கள் தொடா்பாக புகாா் தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் பா.பொன்னையா எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளுா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சாா்பில் செயல்படும் மகளிா் திட்டம் மூலம் அரசுசாரா நிறுவனங்கள், மகளிா் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மகளிா் குழுக்கள் வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியாா் துறை வங்கிகள் நுண்நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்று பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனா். தற்போதைய நிலையில் கரோனா நோய்த் தொற்று காரணமாக பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. எனவே அவசரத் தேவைக்கென கடன் பெற்றவா்களிடம் கடன் தொகை, வட்டித் தொகையையும் உடனே செலுத்த சிறுநுண் நிதி நிறுவனங்கள் பல்வேறு வழிகளில் மிரட்டி வருவதாக புகாா் வந்துள்ளது.

இந்த கரோனா நெருக்கடியான நேரத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு கடன் வசூல் செய்யும் கடின போக்கினை கைவிட வேண்டும். இதை மீறும் நிதி அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT