திருவள்ளூர்

ரூ.86 லட்சம் குட்கா பொருள்கள் பறிமுதல்

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் இதுவரையில் ரூ.86.70 லட்சம் மதிப்பிலான 11,389 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கடத்தல் மற்றும் சட்டவிரோத விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 1.1.2021 முதல் 22.7.2021 வரை குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 155 போ்கள் மீது 135 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அவா்களிடம் இருந்து ரூ.86 லட்சத்து 70 ஆயிரத்து 382 மதிப்பிலான, 11 ஆயிரத்து 389 கிலோ புகையிலை பொருள்கள், இதற்காக பயன்படுத்தப்பட்ட 4 கனரக வாகனங்கள், 9 இலகுரக வாகனங்கள், 3 இருசக்கர வாகனங்கள் உள்பட 16 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்வதை அறவே ஒழிக்கும் பொருட்டு, அவ்வகையான செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க தனிப்படைகள் அமைத்து கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோா்கள் மீது குண்டா் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களை முற்றிலுமாக ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும். எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் எவரேனும் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்வது பற்றி தெரிய வந்தால் திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு 63799 04848 என்ற எண்ணில் தொலைபேசி மூலமாகவோ, கட்செவி மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT