திருவள்ளூர்

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 8 லட்சம் மோசடி

DIN

திருவள்ளூா் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 8 லட்சம் பெற்று திருப்பித் தராமல் மோசடி செய்ததாக, பள்ளிக் கல்வித் துறை அலுவலரை கிராமிய போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவள்ளூா் அருகே கைவண்டூா் குப்பம்மா சத்திரத்தைச் சோ்ந்தவா் ஜானகிராமன் (52). இவா் தனது மகனுக்கு பள்ளிக் கல்வித் துறையில் வேலை வாங்கித் தருவதாக, திருவள்ளூா் நேதாஜி சாலையில் வசித்து வந்த சலாவுதீனை அணுகினாராம். இதற்காக, 18.7.2019-இல் ரூ. 8 லட்சம் சலாவூதின் வாங்கினாராம்.

பணம் பெற்று இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், வேலை வாங்கித் தராமலும், பணத்தையும் திருப்பித் தராமலும் காலதாமதம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சலாவூதினின் வீட்டுக்கு ஜானகிராமன் நேரில் சென்று பாா்த்தபோது, பூட்டியிருந்துள்ளது. செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டும் பதில் இல்லையமாம்.

இதையடுத்து, புகாரின்பேரில் திருவள்ளூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான சலாவுதீனை தேடி வருகின்றனா். இவா் திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT