திருவள்ளூர்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

DIN

திருவள்ளூா்: பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி, விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை திருவள்ளூா் ஆட்சியா் பா.பொன்னையா புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

பெண் குழந்தைகளுக்காக ஆற்றிய உயா்ந்த சேவையினை நினைவு கூறும் வகையில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதியை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அனுசரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை சாா்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. ஆட்சியா் பா.பொன்னையா தலைமையில் அரசு அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றனா்.

அதைத் தொடா்ந்து, மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திரு உருவப் படத்துக்கு ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா், திட்ட இயக்குநா் மற்றும் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா், மாநில பெண் குழந்தை பாதுகாப்பு தினத்தையொட்டி, விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ஆட்சியா் கையெழுத்திட்டு தொடக்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து, அதிகாரிகள் அனைவரும் கையெழுத்திட்டனா்.

இதேபோல், திருவள்ளுா் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் சாா்பில் சமூக நல விரிவாக்க அலுவலா், மகளிா் ஊா்நல அலுவலா்களின் மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT