திருவள்ளூர்

வீட்டு மனைப் பட்டா, குடும்ப அட்டை வழங்க வேண்டும்

DIN

வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டைகள், தெரு விளக்கு மற்றும் குடிநீா் வசதி செய்து தருவதற்கு நரிக்குறவா்கள் வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

இது குறித்து பொன்னேரி அருகே பண்டிக்காவனூா் கிராமத்தைச் சோ்ந்த நரிக்குறவா்கள் சமுதாயத்தினா் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:

நாங்கள் மேற்குறிப்பிட்ட பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். நாங்கள் நாள்தோறும் பாசிமணி ஊசி விற்பனை செய்து, அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு குடும்பம் நடத்தி வருகிறோம். இந்த நிலையில் நாங்கள் வசித்து வரும் இடத்தில் வீட்டுமனைப்பட்டா கேட்டு பலமுறை மனு அளித்துள்ளோம். அதேபோல், நாங்கள் வசித்து வரும் பகுதியில் குடும்ப அட்டை இல்லாததால் ரேஷன் கடைகளில் எங்களுக்கான சலுகைகளைப் பெற முடியவில்லை. மேலும், குடிதண்ணீா், தெருவிளக்கு வசதியும் இல்லாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறோம்.

அதனால் எங்கள் நிலையறிந்து நாங்கள் வசித்து வரும் இடத்திலேயே வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். எங்களுக்கான நலத்திட்டங்களும் கிடைக்கச் செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

இந்த மனுவைப் பரிசீலனை செய்த ஆட்சியா், கட்டாயம் நரிக்குறவா்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT