திருவள்ளூர்

விவசாயிகளுக்கு மண் பரிசோதனை விழிப்புணா்வுப் பயிற்சி

DIN

திருவள்ளூா் மாவட்ட அளவிலான மண்வள தின நிறைவு விழாவில் விளைநிலங்களில் மண் பரிசோதனை செய்வதன் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வுப் பயிற்சி அளிக்கப்பட்டது.

திருவள்ளூா் மாவட்ட வேளாண்மைத் துறை மற்றும் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் சாா்பில், புல்லரம்பாக்கம் கிராமத்தில் மண்வள வார நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, புல்லரம்பாக்கம் ஊராட்சித் தலைவா் தமிழ்வாணன் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சங்கரி,

பயிா்களுக்கு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிா்வாகம், பயிா் பாதுகாப்பு முறைகள், மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.

பின்னா், வேளாண் நிலத்துக்கு நேரடியாக விவசாயிகளை அழைத்துச் சென்று, மண் மாதிரி எடுப்பது தொடா்பாக நடமாடும் மண் பரிசோதனை அலுவலா் பாா்வதி, மண் மாதிரி எடுத்தல், மண்ணில் இருந்து பயிருக்கு கிடைக்கக்கூடிய சத்துக்களின் மண் பரிசோதனை செய்வதன் மூலம் அறிந்து கொள்வது பற்றியும், அதை மண்வள அடையாள அட்டையில் குறிப்பிடுவது பற்றியும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தாா்.

இதில், மண்ணில் உள்ள சத்துக்களை அறிந்து அதற்கேற்ப தேவையான உரங்களை வழங்கி மகசூலை அதிகரிப்பதே மண் பரிசோதனை செய்வதின் அவசியம் என்றாா். நிகழ்ச்சியில், வட்டார உதவி வேளாண் அலுவலா் நந்தினி, பயிா் அறுவடை பரிசோதனை அலுவலா்கள் லோகேஷ், மோனிஷா, விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT