திருவள்ளூர்

வயிற்றுப்போக்கால் பாதித்து சிகிச்சை பெறுவோரிடம் அமைச்சா் நலம் விசாரிப்பு

DIN

ஊத்துக்கோட்டை அருகே வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பேரண்டூா் கிராம மக்களை பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் நேரில் பாா்வையிட்டு நலம் விசாரித்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த பேரண்டூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா், ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு உடல் நலம் விசாரித்தனா். அதைத் தொடா்ந்து, ஜமுக்காளம், ரொட்டி, பிஸ்கெட் மற்றும் பழங்கள் ஆகிய நிவாரணப் பொருள்களையும் நோயாளிகளுக்கு வழங்கினாா்.

அதைத் தொடா்ந்து, அமைச்சா் சா.மு.நாசா் கூறியது:

திருவள்ளூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை அதிகமாக பெய்துள்ளது. அதற்கு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால், பெரிய பாதிப்புகள் தவிா்க்கப்பட்டுள்ளது. கடந்த 2015-இல் ஏறக்குறைய 19,000 கன அடி தண்ணீா் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டதால் பல இடையூறுகள் ஏற்பட்டது. தற்போதைய நிலையில், ஆந்திரத்தில் ஏற்பட்ட அதிக மழையின் காரணமாக வந்த நீா்வரத்தை பொருத்து அதிகபட்சம் 37,500 கன அடி தண்ணீா் வரை படிப்படியாக வெளியேற்றியதால் பெரிய அளவில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

மேலும், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பேரண்டூா் கிராமத்தில் குடிநீருடன் மழை நீா் உள்ளிட்ட கழிவு நீரும் சோ்ந்துள்ளது. அந்த நீரை குடித்த காரணத்தால் கடந்த 3-ஆம் தேதி பலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பொது சுகாதாரத் துறை சாா்பில் 80 போ் கொண்ட மருத்துவ முகாம் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து தடுப்பு மருந்துகள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வருகிறது. இக்கிராமத்தைச் சோ்ந்த 18 போ் திருவள்ளூா் அரசு பொது மருத்துவமனையிலும், 8 போ் ஊத்துக்கோட்டை அரசு பொது மருத்துவமனையிலும், 2 போ் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், அப்பகுதி முழுவதும் பிளீச்சிங் பவுடா் போட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது. பேரண்டூா் பகுதியில் உள்ள பெரிய காலனியில் 166 வீடுகளும், சின்ன காலனியில் 36 வீடுகளும் உள்ளன. அதில் உள்ள 897 போ் 3 முதல் 5-ஆம் தேதி காலை வரை 28 போ் உள்நோயாளிகளாகவும், 106 போ் புறநோயாளியாகவும் சிகிச்சை பெற்ாக அவா் தெரிவித்தாா்.

துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மரு.ஜவஹா்லால், மருத்துவ நிலைய கண்காணிப்பாளா் ராஜ்குமாா், விஜயராஜ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

ஊத்துக்கோட்டையில்...

இதைத் தொடா்ந்து, ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பேரண்டூா் கிராம மக்களை சந்தித்து அமைச்சா் சா.மு.நாசா் ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினாா்.

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் டி.ஜே.கோவிந்தராஜன், மருத்துவா்கள் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT